[ No Description ]



 



FREE

ஏரிகள் நகரம் மற்றும் மத்தியப் பிரதேசம் அழைக்கிறது ஆகிய இரண்டு மின் நூல்களைத் தொடர்ந்து, சுற்றுலா சென்று வந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் மூன்றாவது மின் நூல் இது. முதல் இரண்டு மின் நூல்களை வெளியிட்டு சில மாதங்கள் ஆகிவிட்டது. மூன்றாவதாக வெளியிடும் இம்மின்னூலில், தேவ் பூமி என அழைக்கப்படும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேற்கொண்ட பயணம் பற்றிய குறிப்புகள், பார்க்க வேண்டிய இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ”ஹிமா” எனும் வார்த்தைக்கு பனி என்ற அர்த்தம் உண்டு. முற்றிலும் பனிபடர்ந்த மலைகள் கொண்டதால் இப்பகுதிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் என்று பெயர் சூட்டினார்களாம். இப்படி பனி படர்ந்திருக்கும் பிரதேசத்திற்கு செல்வது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். இந்த பனிபடர்ந்த பிரதேசத்திற்கும், அங்கே இருக்கும் இடங்களைப் பார்ப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஹிமாச்சலில் நிறைய இடங்கள் பார்க்க உண்டு. ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்த அனுபவங்கள் உண்டு. இந்தப் புத்தகத்தினை ஹிமாச்சல் பிரதேசம் பற்றிய முதல் தொகுப்பு எனவும் சொல்லலாம். வரும் தொகுதிகளில் குல்லூ-மணாலி, மணிக்கரன், தரம்ஷாலா, ஜ்யோத் என பல இடங்களைப் பற்றியும் பார்க்கப் போகிறோம். அந்த கட்டுரைகள் எனது வலைப்பூவில் கூட இன்னும் எழுதவில்லை. இங்கேயே முதலில் வந்தாலும் வரலாம்! எனது வலைப்பூவில் தேவ் பூமி ஹிமாச்சல் என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்ட பதிவுகளைத் தொகுத்து, புகைப்படங்களோடு மின் நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி. வாருங்கள் தேவ் பூமி ஹிமாச்சலத்திற்குச் செல்வோம்….. நட்புடன் வெங்கட் நாகராஜ்.
view book