கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மொழி என போற்றப்படும் தமிழ் மொழியானது ஓலைச்சுவடு காலம் தொடங்கி பல்வேறு விதமான கால கட்டங்களை கடந்து இணையம் வரை வளர்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞான யுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் கணினி மற்றும் இணையத்தில் வளர்ச்சியடைந்துவிட்டது.
காலந்தோறும் மரபு வழிச் சாதனங்களால் பேச்சு வழக்கில் செய்தி பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மனித சமூகத்திற்கு வழிகாட்டுவனவாக இசை, சொற்பொழிவுகள், கலைகள், பாடல்கள், கதைகள், பழமொழிகள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் எல்லாம் மக்களின் வாழ்வு சிறப்புற அமைய அறிவுரை கூறி வழிகாட்டியாக அமைந்திருந்தன. இதில் இருந்து மாறுப்பட்டு புதிய தொழில்நுட்ப முறைகளால் தகவல் தொடர்பு வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமான இணையம், தகவல் தொடர்புச் சாதனங்கள், மின் வழிச் சாதனங்கள், மின்னணுச் சாதனங்கள், அச்சு வழிச் சாதனஙங்கள், மின் இதழ்கள் மற்றும் இது போன்ற புதுப்புது கோணங்களில் தகவல் தொடர்பினை ஏற்படுத்தி வருகின்றன. ஒலிப்பதிவு கருவி, ஒளிப்படக் கருவி, ஆகிய சாதனங்கள் மின்னணுச் சாதனங்களாகக் குறிப்பிடுகின்றனர். தொழில்நுட்பக் கருவிகள் களப்பணியைப் பொறுத்தவரை தகவல்களை நுட்பமாகவும் நுணுக்கமாகவும் பெற்றுத் தருவதிலும் தரவுகளை ஆவணப்படுத்துவதிலும் மின்னணுச் சாதனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
‘இணையத்தில் தமிழ் மின்னூல்கள்’ என்ற தலைப்பின் கீழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி, இணையமும் தமிழும், இணையம் பொருள், இணைய குறியீடு, இணைய முகவரி, வலைத்தளம், வலைத்தளம் உருவாக்குதல், இணைய வரலாறு, இணையப் பயன்பாடு, இணையத் தமிழ் மாநாடுகள், மற்றும் மின்னூல், மின்னூல் உருவாக்கும் முறை, மின்னூல் வாசிக்கும் கருவிகள், மின்னூலை உருவாக்கும் போது ஏற்படும் சிக்கல் மற்றும் தீர்வுகாணுதல் மின்னூல் வரலாறு, மின்னூல் அமைப்பு, மின்னூல் பயன்பாடு, மின்நூலகம், மற்றும் மின் இதழ்களின் தோற்றம் வளர்ச்சி, மின் இதழ்களின் வகைப்பாடு என அடிப்படையைக் கொண்டு ஆராயப்படுகிறது..
‘இணையத்தில் தமிழ் மின்னூல்கள்’ என்ற தலைப்பில் மின்னூலைப் பற்றிய முழுமையான முறையான அறிவை தமிழ்ச்சமூகத்திற்கு வழங்குதல் மற்றும் இணையப் பயன்பாட்டின் அடிப்படையில் மின்னூல் அமைப்பு, மின்னூல் உருவாக்கும் முறை, மின்னூல் வாசிக்க உதவும் வன்பொருள்கள், மற்றும் மென்பொருள்கள், மின்னூல் பயன்பாடு, மின் நூலக அமைப்பு, மின் இதழ் தோற்றம் வளர்ச்சி, தமிழ் இணைய மாநாடு அறிந்து கொள்வதற்கு பயன்படுகின்றது.
உலக அளவில் உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ்மொழி. வருங்காலத்தில் இன்னும் விரைவாக வளரும் என்று நோக்கத்தோடு இந்நூலினை உருவாக்கியுள்ளேன்.
Dear publishers and self-publisher, kindly be informed that Book Capital & E-Sentral are now using the same publisher panel for your convenience in uploading and updating your eBook content.
If you wish to proceed to log in/ sign up, click Yes. Otherwise, kindly click the X icon to close.